சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவு.!
decided inmates product sell in online
சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவு.!
தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இயற்கை உணவுகள், தரமான செக்கு எண்ணெய் வகைகள், படுக்கை விரிப்புகள், காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைதிகளால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பொருட்களை விற்பனை செய்வதற்காக சிறை துறை சார்பில் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த 2013-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் "சிறை பஜார்" தொடங்கி வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், சென்னை, சேலம், திருச்சி, கடலூர், வேலூர், மதுரை, பாளையங்கோட்டை, கோவை உள்ளிட்ட மத்திய சிறைகளிலும் சென்னையில் புழல் சிறை எண்.1 மற்றும் 2, பெண்கள் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதில் கிடைக்கும் லாபத்தில் கைதிகளுக்கு 20 சதவீதமும் அரசுக்கு 20 சதவீதமும், சிறை ஊழியர்கள் நலனுக்கு 20 சதவீதமும் பொருட்கள் தயாரிப்பு நிதிக்கு 40 சதவீதமும் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
English Summary
decided inmates product sell in online