உள்ளாட்சி அமைப்புகளின் கட்டண பாக்கி.. மின் விநியோகத்தை துண்டிக்க முடிவு..!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர், தெரு விளக்கு, சாலை பராமரிப்பு உள்ள சேவை பணிகளை மேற்கொள்கின்றன. இதன் காரணமாக உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்த 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது.

இருப்பினும் உள்ளாட்சி அமைப்புகள் மின் கட்டத்தினை செலுத்தாமல் பல மாதங்களாக அலட்சியம் காட்டி வருகின்றன. அதன்படி ஊராட்சிகளில் 932 கோடி ரூபாயும், பேரூராட்சிகளின் 48 கோடி ரூபாயும், நகராட்சிகளில் 319 கோடி ரூபாயும், மாநகராட்சிகளில் 660 கோடி ரூபாயும் நிலுவைத் தொகையாக உள்ளான. 

மக்களின் குடிநீர் சேவைகளுக்காக மட்டும் மாநகராட்சிகள் 198 கோடி ரூபாயும் நகராட்சிகள் 96 கோடி ரூபாயும் பேரூராட்சிகள் 14 கோடி ரூபாயும் ஊராட்சிகள் 229 கோடி மின் கட்டணம் நிலுவை வைத்துள்ளனர். 

தமிழ்நாடு மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் அதை சரி செய்யும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து நிலுவை மின்கட்டணத்தை விரைந்து வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி பிரிவு இயக்குனர், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவைத் தொகை வைத்துள்ள அனைத்து ஊராட்சி அமைப்புகளின் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற மின் இணைப்புகளின் விநியோகத்தை துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலுவை தொகை செலுத்த அனைத்து ஊராட்சி அமைப்புகளுக்கும் ஏற்கனவே மின்வாரியம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Decided to cut power supply in local bodies due to payment arrears


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->