பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் ஆழம்,அகலபடுத்தும் பணி ..மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
Deepening and widening of Pulicat lake mouth District Collector M Prathap inspects
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவ நலத் துறை சார்பில் நிரந்தரமாக ஆழம்,அகலபடுத்தும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைபட்டு மீனவர்கள் கடலுக்குள் தங்கள் படகுகள் மூலம் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுவதால் பழவேற்காடு மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசால் அரசாணை (Ms) எண் 250 கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத் (மீன்1) துறை நாள் 05.10.2020-ல் ரூ 26.85 கோடி மதிப்பீட்டில் பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர் வாரி அலை தடுப்பு சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தப்படும் பணியை மேற்கொள்வதற்கு நிர்வாக ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி XXVI இன் கீழ் ரூ 26.85 கோடி மதிப்பீட்டில் அரசின் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு முகத்துவாரத்தை நிரந்தரமாக நிலைப்படுத்தும் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை செயல்படுத்திட ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, 24.01.2024 அன்று முதல் பணிகள் தொடரப்பட்டு, வடக்கு அலை தடுப்பு சுவர் 325 மீட்டரும் மற்றும் தெற்கு அலை தடுப்பு சுவர் 292 மீட்டரும் அமைக்கப்பட்டு, 4 கி.மீ சாலை அமைத்திடவும் மற்றும் தற்பொழுது மணல் தூர்வாரும் பணிகள் நடை பெறுவதை உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பழவேற்காடு முகத்துவாரத்தை நிரந்தரமாக நிலைப்படுத்தும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வரும் மழை காலத்திற்குள் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார் .
இதில் உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை ஞா.அஜய் ஆனந்த், தனித்துணை ஆட்சியர் (சபாதி) பாலமுருகன், வட்டாட்சியர் சோமசுந்தரம் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Deepening and widening of Pulicat lake mouth District Collector M Prathap inspects