இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை - நடிகர் விஜய்!! - Seithipunal
Seithipunal

40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் கூறிவுள்ளார்.

குவைத் நாட்டில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்கப் பகுதியில் ஆறு மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 150க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்டதால், தீ விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும், 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உயிரிழந்த 41 பேர்களில் 2 தமிழர்களும் உள்ளனர். அவர்களின் உடலை தமிழகம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், குவைத் தீ விபத்தில் தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குமாறு அயலக தமிழர் நலத்துறைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

மத்திய அரசு சார்பில் உயிரிழந்து இந்தியர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்குவதாக தகவல் வெளியாகிவுள்ளது. காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50000 வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்தநிலையில், நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் வேதனை தெரிவித்துள்ளார். விஜய் கூறிவுள்ளதாவது, குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலார்கள் தங்கியிருந்த கட்டடத்தில் தீ விபத்தில் தமிழ்நாடு, கேரளம், பிற மாநிலங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என கூறிவுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

Deeply saddened to hear the news of untimely deaths of Indians Actor Vijay

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?

Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?

Seithipunal
--> -->