நஷ்டத்தில் 10 நிமிட டெலிவெரி சேவை.. சொமேட்டோ நிறுவனம் சேவை நிறுத்தம்.!
Delivery of 10 Mins Zomato stopped
டொமேட்டோ நிறுவனத்தின் 10 நிமிட உணவு டெலிவரி முறை கைவிடப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
சமைத்து சாப்பிட்ட காலம் போய் ஹோட்டலில் சென்று சாப்பிட்டு பலரும் பழகி விட்டனர். அப்படிப்பட்டவர்களை சோம்பேறியாக்கும் விதமாக மற்றொரு அப்டேட் வெர்சன் தான் வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யும் முறை. இது பலரையும் சோம்பேறி ஆக்கிவிட்டது என்று கூறினால் அது மிகையாகாது.
ஆனால், இதன் மூலம் உடல்நலம் குன்றியவர்கள் போன்றவர்கள் வீட்டில் இருந்தவாறு உணவை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும். என்னதான் நன்மைகள் இருந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் உணவு டெலிவரி நிறுவனங்கள் அதிகமாகி வருகின்றன.
புகழ்பெற்ற டெலிவரி நிறுவனமான zomato 10 நிமிடங்களில் ஆர்டர் செய்யும் உணவை டெலிவரி செய்யும் முறையை சமீபத்தில் அறிவித்தது. இது கடந்த 2022 மார்ச்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அறிமுகப்படுத்தப்பட்டவுடன் பலரும் வேலை செய்பவர்களுக்கு விபத்து மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய காரணியாக இது இருக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், இதையெல்லாம் சொமேட்டோ நிறுவனம் சற்றும் பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில், இது போன்ற ஒரு ஆபரால் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, சொமேட்டோ நிறுவனம் தற்போது அந்த பத்து நிமிட உணவு டெலிவரி சேவையை கைவிடுகிறது.
English Summary
Delivery of 10 Mins Zomato stopped