அம்மா உணவகத்தை இடிப்பது குறித்து கோரிக்கை மேல் கோரிக்கை வைக்கும் மக்கள்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் ராஜ மன்னார் சாலையில் "அம்மா உணவகம் திட்டம்" தொடங்கப்பட்ட போது உணவகம் அமைக்கப்பட்டது. தனியார் உணவகம் போல் கட்டிட அமைப்பும் சரி, விற்பனையானாலும் சரி மிகுந்த பயனுள்ளதாக பொதுமக்களிடம் வரவேற்புடையதாகவும் இருந்து வருகிறது. 

இந்த உணவகத்தால் அந்த பகுதியில் வசிக்கின்ற ஏழை எளியோர் முதல் தொழிலாளர்கள், முதியோர் பென்சன்தாரர்கள் என ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள அம்மா உணவகம், காரிய மண்டபம், ரேஷன் கடை ஆகிய கட்டிடங்கள் இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது  காரிய மண்டபம் இடிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, அம்மா உணவகத்தை இடிக்கும் நடவடிக்கையை ரத்து செய்து மாற்று வழி காண பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசுக்கு கோரிக்கை மேல் கோரிக்கை வைத்துள்ளனர். 

அந்த பகுதியில் வசித்து வரும், அரசு வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பழனியப்பன் தெரிவித்ததாவது:- நான் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பின், நானும் எனது மனைவியும் தனியாக வசித்து வருகிறோம். இரண்டு பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வருகிறார்கள். வயதான காலத்தில் எங்கள் வீட்டின் அருகே இருந்த இந்த உணவகத்தில் தான் நாங்கள் இருவரும் 3 வேளையும் சாப்பிட்டு வந்தோம். இப்போது கட்டிடத்தையே இடிக்கப்போவதாக அறிந்தோம். இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னைப் போல் பலரும் இந்த உணவகத்தால் பயன் அடைந்து வருகிறார்கள் என்று தெரிவித்தார். 

மாநகராட்சி ஆணையருக்கு அம்மா உணவகம் அப்புறப்படுத்துவதை ரத்து செய்யக்கோரி முன்னாள் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:- 

விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 136-வது வார்டு ராஜமன்னார் சாலையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை இடித்து அப்புறப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இந்த அம்மா உணவகத்தில் அந்த பகுதியில் வசிக்கின்ற ஏழை எளிய குடும்பத்தார்கள் மற்றும் முதியோர், விதவை ஆதரவற்றவர்கள் தினமும் காலை, மதியம், இரவு என்று 3 வேளையும் உணவருந்தி வருகிறார்கள். 

இந்த தொகுதியிலே அதிக அளவில் விற்பனை நடைபெறும் அம்மா உணவகம் இதுதான். இந்த உணவகத்தை நம்பி முதியோர்கள், முதியோர் பென்சனை பெற்றுக்கொண்டு இந்த உணவகத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். அம்மா உணவகத்தை அப்புறப்படுத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று அவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

demolition Amma's restaurant people request


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->