தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வின் ஆர்ப்பாட்டம்: வங்காள தேச இந்துக்கள் மீது தாக்குதலை கண்டித்தும், பாதுகாப்பு கோரியும் போராட்டம்!எச்.ராஜா உள்பட 500 பேர் கைது!
Demonstration of BJP all over Tamil Nadu Protest against attack on Bengali Hindus and demanding protection 500 people arrested including HRaja
வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் தொடர்ச்சியான தாக்குதல்களை கண்டித்தும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கோரியும் தமிழகம் முழுவதும் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன.
கோவை டாடாபாத் பகுதியில் பா.ஜ.க வங்காள தேச இந்துக்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமையிலே 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பா.ஜ.க.வின் மூத்த தலைவரான எச். ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கடுமையாக கண்டித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், கைகளில் பதாகைகளை ஏந்தி, வங்காள தேசத்தில் மைனாரிட்டி சமூகத்திற்கு பாதுகாப்பு வழங்க கோஷங்களை எழுப்பினர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், போராட்டம் நடைபெறுவதைத் தொடர்ந்து, காவல்துறை நடவடிக்கை எடுத்தது. எச். ராஜா, ரமேஷ்குமார் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களால் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.
எச். ராஜாவின் பேச்சு:
ஏற்கனவே வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக கூறிய எச். ராஜா, “இங்கு நடத்தப்படும் தாக்குதல்களால் கோவில்கள், சிறுபான்மை சமூகத்தின் உடைமைகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. இதற்கு இந்திய அரசியல் தலைவர்கள் கருத்துகூட தெரிவிக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது” என்று கூறினார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற மற்றொரு போராட்டத்தில் 155 பேர், 30 பெண்கள் உட்பட, காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டங்களின் மூலம், பா.ஜ.க., வங்காள தேச இந்துக்கள் மீதான தாக்குதல்களை மக்கள் முன் கொண்டு வர போராட்டங்களை தொடர்ந்து நடத்துவதாக தெரிவித்துள்ளது.
English Summary
Demonstration of BJP all over Tamil Nadu Protest against attack on Bengali Hindus and demanding protection 500 people arrested including HRaja