விசாரணைக் கைதிகளுக்கு அவசரகால விடுப்பு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


விசாரணைக் கைதிகளுக்கு அவசரகால விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளே அதிகாரம் பெற வேண்டும் என, வழிகாட்டு விதிகளை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இந்த உத்தரவு, புழல் சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள ஒருவரின் மனுவை தொடர்ந்து வந்தது. அவர் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவசர விடுப்புக்காக மனுத்தாக்கல் செய்தார்.  

சிறைத்துறை தரப்பில், தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்கப்படும் விதிகள் உள்ளதாலும், அதேபோல் விசாரணைக் கைதிகளுக்கு விதிகள் இல்லாததாலும் அனுமதிக்க முடியாது என வாதிக்கப்பட்டது.  

இதையடுத்து, நீதிபதிகள், நீதிமன்ற விடுமுறை நாட்களில் விசாரணைக் கைதியின் பெற்றோர் உயிரிழந்தால், அவசர விடுப்பு கோருவது எப்படி? என கேள்வி எழுப்பினர்.  

இத்தகைய அவசர சூழல்களில் இடையூறு இல்லாமல் செயல்பட வழிகாட்டு விதிகளை உருவாக்குமாறு சிறைத்துறைக்கு ஆணையிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc order to TNGovt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->