30 பேரை பலிகொண்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: பெரும் சோகத்தில் நைஜீரியா!
Nigeria school accident
நைஜீரியாவின் ஓயோ மாகாணம் பசொரன் நகரில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி கூட்ட நெரிசலால் 30 பேர் பலியாகியுள்ளனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்காக குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கூடினர்.
இந்த நிலையில், கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஏற்பட்ட நெரிசலில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் அதிக அளவில் குழந்தைகள் பலியானதாக தெரிகிறது.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவத்தின் காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.