உஷார்... இவர்களை மட்டும் தான் குறிவைத்து தாக்குகிறது டெங்கு: முதல் கட்ட ஆய்வில் அதிர்ச்சி!
Dengue attacks people shocking information
தமிழ்நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவது போல் இந்தியா முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த டெங்கு காய்ச்சல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களை அதிக அளவில் தாக்குவதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெங்கு பாதிப்பு அதிகம் யாருக்கு ஏற்படுகிறது என வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டன. அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
இதே போல் அமெரிக்கா வெளியிட்ட ஆய்வின்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பு 2 மடங்கு அதிகம் என தெரிய வந்துள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் டெங்கு வைரஸை எளிதில் தாக்கியது என கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் டெங்கு காய்ச்சல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்காலத்தில் பரவுவதற்கு வாய்ப்பு அதிகம் என முதற்கட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உலகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இது கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய பாதிப்பு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Dengue attacks people shocking information