துணை முதல்வர் உடை விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. சின்னம் பொறித்த டி-சர்ட் அணிந்து பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்தியகுமார் என்பவர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் பிரவீண் சமாதானம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கட்சி சின்னத்துடன் டி-சர்ட் அணிந்து துணை முதலமைச்சர் கலந்து கொண்டால், அது தி.மு.க. சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி போல் தோற்றத்தை ஏற்படுத்தும். 

இதன்மூலம் அவர் கட்சிக்கு ஆதாயம் தேடுகிறார். ஆகவே, கட்சி சின்னத்துடன் டி-சர்ட் அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deputy cm uthayanithi stalin dress case hearing coming soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->