ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு - துணை ஜனாதிபதி தமிழகம் வருகை.!!
deputy president jagadeep dhankar come in tamilnadu for chancellors conference
தமிழக அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று மற்றும் நாளை உள்ளிட்ட 2 நாட்கள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இதனை முன்னிட்டு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்து, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணிக்கு ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் தரையிறங்குகிறார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
இதையடுத்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், இன்று மாலை 6 மணிக்கு ஊட்டி அடுத்த முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்கிறார். இந்த மாநாட்டை நடத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை மார்க்கமாக நேற்று மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். அங்கு அவரை கலெக்டர் லட்சுமி பவ்யா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
English Summary
deputy president jagadeep dhankar come in tamilnadu for chancellors conference