ஜெயங்கொண்டம் : பட்டா மாற்ற 10 ஆயிரம் கேட்ட துணை வட்டாட்சியர் - இடைத்தரகர்கள் உள்பட 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஜெயங்கொண்டம் : பட்டா மாற்ற 10 ஆயிரம் கேட்ட துணை வட்டாட்சியர் - இடைத்தரகர்கள் உள்பட 3 பேர் கைது.!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சுரேஷ். இவர், தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது, பட்டா மாற்றம் செய்ய தனக்கு 10 ஆயிரம்  தரவேண்டும் என்று மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். 

இதற்காகு இடைத்தரகர்களாக வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த சாம்பசிவம் மற்றும் வீரா என்பவர்கள் செயல்பட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைத்துறையிடம் புகார் அளித்துள்ளார். 

உடனே லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய நோட்டுக்களை சுரேஷிடம் வழங்கியுள்ளனர். அதன்படி சுரேஷ் அந்த பணத்தை இடைத்தரகர் சாம்பசிவத்திடம் நேற்று வழங்கியுள்ளார். அந்த பணத்தை சாம்பசிவம் வீரா என்பவரிடம் கொடுக்க அவர் அந்த பணத்தை வேறு ஒருவரிடம் கொடுத்து வைத்திருக்குமாறு தெரிவித்துள்ளார். 

இதனை மறைந்திருந்து கவனித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இடைத்தரகர்கள் சாம்பசிவம் மற்றும் வீரா இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பணத்தை துணை வட்டாட்சியர் சரவணனுக்கு கொடுப்பதற்காக பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர்களுடன் துணை வட்டாட்சியர் சரவணனையும் கைது செய்து அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deputy tahsildar and two peoples arrested for bribe in jayankondam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->