ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் சோதனை; சிக்கிய லேப்டாப் மற்றும் ஆவணங்கள்..?
Special Investigation Officers raid Gnanasekarans house
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவர் வீட்டில் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
சுமார் 5 மணி நேரம் சோதனை நடைபெற்றுள்ளது. இதன்போது ஞானசேகரன் பயன்படுத்தி வந்த லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஞானசேகரன் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஞானசேகரனை தவிர்தது மற்றொரு நபரும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படப்படுகிறது.
பல்கலை மாணவியை மிரட்டும்போது போனில்'SIR' என குறிப்பிட்டுள்ளார். அந்த SIR யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, விசாரணைக் குழு அதிகாரிகள் இன்று காலை ஞானசேகரன் வீட்டில் சோதனைமேற்கொண்டனர்.
இது போன்ற பல சம்பவங்களில் ஞானசேகரன் ஈடுபட்டுள்ளதாக கூறுப்படுகிறது. இதனால் லேப்டாப்பை ஆய்வு செய்தால் அவர் எடுத்த வீடியோக்களை அதில் சேமித்து வைத்துள்ளாரா? என்பது தெரிய வரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், ஞானசேகரன் மீது கொள்ளை தொடர்பான வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.இது தொடர்பாக அவருடைய இரண்டு மனைவிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் ஞானசேகரன் கொள்ளையடித்த பணத்தில் நகைகள் மற்றும் சொத்துகள் வாங்கினாரா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
English Summary
Special Investigation Officers raid Gnanasekarans house