'சுருக் எழுத்தின் தந்தை; திரு.சர் ஐசக் பிட்மன் அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


1837ம் ஆண்டு பிட்மன் ஷார்ட்ஹேண்ட் எனப்படும் சுருக்கெழுத்து முறை அறிமுகமானது. இன்று பொதுக்கூட்டங்கள், கட்டுரைகள், கருத்தரங்குகளில் பேசப்படுபவை எல்லாம் அனைவரும் குறிப்பெடுக்க பிட்மனின் கடின உழைப்பே காரணம் என்றால் அது மிகையில்லை. 

சுருக்கெழுத்தின் தந்தை சர் ஐசக் பிட்மன். இங்கிலாந்தின் டிரவ்பிரிட்ஜ் நகரில் 1813, ஜனவரி 4 ஆம் தேதி பிறந்தவர் பிட்மன். பிரிட்டிஷ் அன் பாரின் ஸ்கூல் சொசைட்டியில் கல்விப்பயணத்தை துவக்கினார். பின்னர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவரது நோட்ஸ்களை வேகமாக குறிப்பெடுக்க சில மாணவர்களால் முடியவில்லை. அதே நேரம் அவர்களுக்காக தனது வேகத்தையும் பிட்மனால் குறைத்துக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் இதற்கான மாற்று வழியை யோசிக்க ஆரம்பித்தார்.

பிட்மன் அப்போதுதான் எழுத்தின் நீண்ட வடிவங்களை சுருக்கமான வடிவத்தில் குறிப்பால் உணர்த்தினால் என்ன என்று யோசிக்கத் தொடங்கினார். பல நாட்கள் இரவு, பகலாக யோசித்து கடைசியில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தார். 1837ம் ஆண்டு பிட்மன் ஷார்ட்ஹேண்ட் எனப்படும் சுருக்கெழுத்து முறை அறிமுகமானது.

 இன்று பொதுக்கூட்டங்கள், கட்டுரைகள், கருத்தரங்குகளில் பேசப்படுபவை எல்லாம் அனைவரும் குறிப்பெடுக்க பிட்மனின் கடின உழைப்பே காரணம் என்றால் அது மிகையில்லை. சுருக்கெழுத்தின் முறையை அடுத்தடுத்த உயரத்துக்கு கொண்டு சென்ற பிட்மன் 1897ல் இதே ஜனவரி 22 தேதி தனது 84ம் வயதில் மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suruk is the father of writing Birthday of Sir Isaac Pittman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->