தமிழகத்தில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாகதான் அதிகாரிகள் செயல்படுகிறார்கள் - அண்ணாமலை பேட்டி.! - Seithipunal
Seithipunal


இன்று தமிழகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜையும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த  விழாவை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள் முத்துராமலிங்க தேவரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

அதன்படி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது:- 

"முத்துராமலிங்க தேவர் ஐயா தமிழகத்தின் முக்கியமான காலகட்டத்தில் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்திருக்கிறார். தமிழகத்தில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாகதான் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஆளுகின்ற அரசியல்வாதிகள் எதை வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் மறைக்கலாம், எதை வேண்டுமானாலும் நடத்தலாம் என்கிற மிதப்பில் தான் உள்ளார்கள்.

தற்போது, தமிழகத்தில் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை தான் உள்ளது. ஆகவே மீண்டும் தேவர் பிறந்து வர வேண்டும் என்று தமிழக மக்கள் நினைக்கின்றனர். முத்துராமலிங்க தேவரின் சித்தாந்தம் மற்றும் கொள்கையை பாஜகவால் மட்டும் தான் செயல்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devar jayanthi gurubooja bjp annamalai speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->