தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல்.! - Seithipunal
Seithipunal


தேவ ஜெயந்தி விழாவில் இரு பிரிவினர் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கானாவிளக்கு தேவர் சிலை பகுதியில் தேவர் ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையடுத்து கானாவிளக்கு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மாலை முதல் இரவு வரை தனித்தனி பிரிவுகளாக வந்து சிலைக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அப்போது கொண்டாட்டத்தில் இளைஞர்கள் சிலர் சாலையில் சென்ற தனியார் பேருந்தை மறித்தும் அதன் மீது ஏறி நடனமாடியுள்ளனர். அப்போது மற்றொரு பிரிவினர் அவர்களை விலக்கிவிட முயற்சித்தனர். அப்போது இரண்டு பிரிவை சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது இரண்டு பிரிவுகளை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனையடுத்து உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு பிரிவினரையும் விளக்கி விட்டனர்.  இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தேனி மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devar Jayanthi riot in theni


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->