சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த நிலையில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வரும் இன்று (ஜூன் 12) முதல் ஜூன் 15ம் தேதி வரை 4 நாட்கள்சதுரகிரி மலைக்கு செல்ல  பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees allowed to chaturagiri temple for vaikasi Month


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->