தமிழகத்தை உலுக்கிய மரண ஓலம்.. கள்ளச்சாராய தேடுதல் வேட்டைக்கு தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வம்பாமேடு பகுதியை சேர்ந்தவர் அமரன் என்ற கள்ளச்சாராய வியாபாரி  விற்ற கள்ளச்சாராயத்தை எக்கியர்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த பலர் நேற்று முன்தினம் வாங்கி குடித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மயங்கி விழுந்துள்ளனர். இவர்களை மீட்ட அவர்களது உறவினர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவர்களில் தரணிவேல், ராஜமூர்த்தி, மண்ணாங்கட்டி ஆகியோர் நேற்று இறந்தனர். மேலும் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதே பகுதியை சேர்ந்த 13 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மலர்விழி, விஜயன், சங்கர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்குமார் என்பவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்யும் நோக்கில் கடலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராய வியாபாரிகள் 22 பேரை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று இரவு முதல் அதிரடி சோதனை நடத்தினர். கடலூர் மாவட்டம் முழுவதும் சாராயம் விற்றதாக 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டோரிடம் இருந்து 226 லிட்டர் சாராயம் மற்றும் 517 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மதுக்கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான புகார்களை 7418846100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. தமிழகம் முழுவதும் வனப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DGP orders to conduct fake liquor raid across TN


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->