ஏடிஎம் கொள்ளை சம்பவத்தின் எதிரொலி.. தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ. 72.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தீவிர வாகன தணிக்கை மற்றும் தனியார் விடுதிகளில் சோதனை நடத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் வெளியானது முதல் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஏடிஎம் கொலை சம்பவம் நடந்த பகுதி மற்றும் மாவட்ட எல்லைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே ஆந்திரா, கர்நாடகா மாநில போலீசார் உடன் இணைந்து மாநில எல்லைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் தமிழகத்தில் தங்கி உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஒன்றை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DGP orders to conduct raids in private hotels across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->