பொது மக்களே உஷார்.. லேட்டஸ்ட் டெலிகிராம் மோசடி.. தமிழக டிஜிபி எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


இணையவழி குற்றவாளிகள் தற்பொழுது டெலிலாம் குரூப் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "சைபர் கிரைம் குற்றவாளிகள் வாட்ஸ் அப் தளத்தில் லிங்க் அனுப்புவர். அதை கிளிக் செய்தால் டெலிகிராம் எனும் வலைதளத்தில் உள்ள குழுவில் இணைத்து விடுவர். அந்தக் குழுவில் இருக்கும் சிலர் நாங்கள் மிகவும் கஷ்டத்தில் இருந்தோம். இதில் சேர்ந்த பின் தான் எங்கள் வாழ்வில் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்தது.

உறவினர்களிடம் கடன் வாங்கி இந்த குழு வாயிலாக ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தோம். அதற்கு மாதம் வட்டியாக 10,000 ரூபாய் கொடுக்கின்றனர். முதலீடு அப்படியே உள்ளது மாதம்தோறும் வட்டி மட்டும் எங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விடுகின்றனர் என கூறுவார்கள். அதற்கான ஆவணங்களையும் பார்வைக்கு வைப்பார்கள்.

ஐந்து லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தோம் இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் ரூபாய் வரை கிடைத்தது எனவும் கூறுவார்கள். அவர்களின் பேச்சை நம்பி 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மேலும் 25 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என ஆசை காட்டுவார்கள். 

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 50 லட்சம் ரூபாய் செலுத்தினால் அதன் பின் குழுவில் இருந்து நீக்கிவிடுவர். பிறகு அவர்களை தொடர்பு கொள்ளவே முடியாது. எச்சரிக்கையாக இருங்கள்" என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DGP Syilendrababu advises alert in telegram group scam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->