நாட்டுபுற பாடகர் வேல்முருகனுக்கு தருமபுர ஆதினம் அளித்த கௌரவம்..! - Seithipunal
Seithipunal


தருமபுர ஆதினம் நாட்டுப்புற இசைக் கலைஞர் வேல்முருகனுக்கு கிராமிய இசை கலாநிதி என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது.

சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன். இதைத்தொடர்ந்து நாடோடிகள் ஆடுகளை அசுரன் என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் பாடியுள்ளார். இதில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மக்களிடையே புகழ் பெற்றார்.

பின்னணி பாடகராக மட்டுமில்லாமல் பல கோவில்களில் இசை நிகழ்ச்சிகளும் வேல்முருகன் நடத்தி வருகிறார் இதிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பாடகர் வேல்முருகன் கச்சேரி நடத்தினார்.

இந்த இந்த விழாவிற்கு தருமபுர ஆதீனம் அவர்களுக்கு கிராமிய இசை கலாநிதி என்ற பட்டத்தையும் தங்கப் பதக்கத்தையும் பரிசாக அளித்தார். தருமபுரம் ஆதீனத்தின் ஆஸ்தான பாடகர் வேல்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். கிராமியப் பாடகர் ஒருவரை சிவாலயங்களின் ஆஸ்தான தவறாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dharmapuram Adheenam awarded singer velmurugan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->