தர்மபுரி | சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் அதிரடி சோதனை!  - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் மற்றும் 40 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக மக்கள் நல வாழ்வு மற்றும் மருத்துவ துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் ஆய்வு நடத்த உத்தரவிட்டார். 

அதன் பேரில் தர்மபுரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நகர பகுதியில் உள்ள உணவக கடை மற்றும் சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினார்.

தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா தலைமையில் அலுவலர்கள் கிரில் சிக்கன், இறைச்சி கடை உள்ளிட கடைகளில் ஆய்வு நடத்தினர். 

இந்த ஆய்வின் போது இறைச்சிகள் பதப்படுத்தப்பட்டுள்ளதா, உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படும் இறைச்சிகளை பயன்படுத்துகிறீர்களா? இறைச்சிகளில் செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்பட்டுள்ளதா என தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri hotels chicken shops inspection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->