தர்மபுரி: அரசு தொடக்கப்பள்ளியில் பல்லி கிடந்த உணவு! 19 மாணவர்களுக்கு சிகிச்சை! - Seithipunal
Seithipunal


தர்மபுரி அருகே அரசு தொடக்கப்பள்ளியில், இன்று காலை சிற்றுண்டி உணவு உண்ட 19 மாணவர்கள் மாணவர்களுக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், தேவரசம்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு அரசின் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த தொடக்கப் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் படி இன்று காலை மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பிறகு, அந்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்ததை பார்த்து உணவு தயாரிப்பாளர் பார்த்து அதிர்ந்து போய் உள்ளார்.

இதனை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்களிடம் தகவல் தெரிவிக்கவே, அதற்குள் இந்த பள்ளியில் பயின்ற 19 மாணவ, மாணவிகள் அந்த காலை சிற்றுண்டியை சாப்பிட்டு உள்ளனர்.

இதனை அடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அரசு மருத்துவக் குழுவினர் நேரில் வந்து பாதிக்கப்பட்ட 19 மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் குவிந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலை சிற்றுண்டி உணவை உண்ட மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இருந்த போதிலும், பல்லி இறந்து கிடந்தது விவகாரத்தில் அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டது பல்வேறு தரப்பினாலும். பாராட்டப்பட்டு வருகிறது.

ஒரு வேளை உணவு சமைத்து முடித்த பிறகு பல்லி இறந்து விழுந்து இருக்கலாம் என்றும் இந்த கோணத்திலும் இந்த விசாரணை நடந்து வருவதாகவும், மாணவர்கள் உண்ட அந்த உணவு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dharmapuri school Lizard Food


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->