ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வைர கிரீடம் வழங்கிய பரதநாட்டிய கலைஞர்.! - Seithipunal
Seithipunal


108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகவும், சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும் அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம். இந்தத் திருத்தலம் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில், திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடத்தை, பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன் இன்று வழங்கினார். அதனை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் பேசியதாவது:- இந்த கிரீடம் மூன்று ஆயிரத்து 160 கேரட் மாணிக்க கல், 600 வைர கற்கள் மற்றும் மரகதக் கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

தான் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் அரங்கநாதர் மேல் உள்ள பற்றால் இதனை செய்தேன். உலகில் முதல் முறையாக மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைர கிரீடம் இது" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

diamond greedam provide to srirangam aranganathar temple trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->