#திண்டுக்கல் || பேருந்து நிலையத்தில் நின்ற பேருந்தை தூக்கி சென்ற அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விபத்திற்கு இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு பேருந்து ஒன்று ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

பூசாரி கவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன். விவசாயியான இவர் கடந்த 2010 -ஆம் ஆண்டு அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார். 

இந்த வழக்கில் சின்னப்பனின் மனைவி மற்றும் அவர்களின் மகள்களுக்கு 15 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் இழப்பீட்டு தொகையை வழங்காமல் போக்குவரத்து கழகம் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழனி-திருக்கோவிலூர் செல்லும் அரசு பேருந்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindigul bus stand court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->