திண்டுக்கல் | 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  வத்தலக்குண்டு இந்திய மருத்துவ சங்கம்,  ரோட்டரி சங்கம் மற்றும் வத்தலக்குண்டு பேரூராட்சி இணைந்து நடத்திய 'போதையில்லா தமிழகம்' மற்றும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி  ரோட்டரி சங்க தலைவர் தனராஜ் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது.

இந்த சைக்கிள் பேரணியை பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தொடங்கி வைத்தார். 

சைக்கிள் பேரணி வத்தலக்குண்டு மதுரை, திண்டுக்கல் சாலையில் 10 கிலோ மீட்டர் தூரம் கடந்த சைக்கிள் பேரணியில் பிரபல மருத்துவர்கள் சதீஷ், முருகேசபாண்டியன் கலந்து கொண்டனர்.

மேலும், இலங்கை கபடி பயிற்சியாளர் பாஸ்கரன் மற்றும்  பள்ளி மாணவ மாணவியர் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Drug free Tamil Nadu awareness cycle rally


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->