கொடைக்கானல்: சிக்கன் சமைத்து சாப்பிட்ட இளைஞர்கள் பலியான அதிர்ச்சி சம்பவம் - வெளியான அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


கொடைக்கானலில் பார்பிக்யூ சிக்கன் சமைத்துவிட்டு, அடுப்பை அணைக்காமல் உறங்கிய இரண்டு இளைஞர்கள், மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மற்றும் சென்னை சேர்ந்த 4 இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், இதற்காக இரு அறை எடுத்து தங்கி உள்ளனர். 

சம்பவம் நடந்த அன்று ஜெயகண்ணன், ஆனந்தபாபு ஆகியோர் மது அருந்தி கொண்டே, பார்பி க்யூ சிக்கன் சமைத்து சாப்பிட்டு உள்ளனர். 

தேவையான பொருட்களை திருச்சியில் இருந்து இளைஞர்கள் வாங்கி வந்துள்ளனர். இந்த நிலையில், சமைத்து முடித்த பிறகு அடுப்பை அணைக்காமல் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். 

மறுநாள் காலை மற்றொரு அறையில் இருந்த நண்பர்கள் எழுந்து வந்து பார்த்தபோது, இருவரும் இறந்து கிடந்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட, இருவரின் உடலில் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், சிக்கன் சமைத்த பிறகு அடுப்பை அணைக்காததால், எழுந்த புகை காரணமாக இருவரும் மூச்சு திணறி மரணம் அடைந்ததாக தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Kodaikanal Youngster mystery death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->