காலைலயே அதிர்ச்சி! பெரும் விபத்து - உடல் சிதறி பலியான இருவர்! சோகத்தில் திண்டுக்கல்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே இன்று காலை நடந்த வெடி விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நத்தம் அடுத்த பூலா மலை அடிவாரத்தில் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. 

அவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட தகவலின் படி இந்த வெடி விபத்தில் இருவரும் உடல் சிதறி உயிரிழந்ததால் அவர்களின் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் பலியாகிய இரண்டு பேரும் சிவகாசியை சேர்ந்த தொழிலாளர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசா,ர் ஆவிச்சிபட்டியை சேர்ந்த பட்டாசு உரிமையாளர் செல்வம் என்பவரை கைது செய்ய தேடி வருகின்றனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நத்தம் பகுதியில் நடந்த இந்த வெடி விபத்து சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் பட்டாசு ஆலைகளில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழக அரசு மேலும் வெடிகுபத்துகள் நடக்காத வகையில், இந்த விஷயத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul naththam Crackers Factory Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->