பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொல்லை., காவல் ஆய்வாளரின் மீது வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


பணியில் இருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் ஆய்வாளரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, கீரனூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வீரகாந்தி (வயது 55). இவர் கடந்த மாதம் பணியில் இருக்கையில், காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் அதிகாரி திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி விஜயகுமாரி, காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோரிடம் நேரடியாக புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்ற அதிகாரிகள், காவல் ஆய்வாளர் வீரகாந்தியை திண்டுக்கல் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்தவும் பழனி அனைத்து மகளிர் காவல் துறையினருக்கும் உத்தரவிடப்பட்டு இருந்தது. 

இதனையடுத்து, பழனி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வீரகாந்தி பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகவே, அவரின் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul Palani Near Keeranur Village Police Station Police Inspector Veera Gandhi Sexual Torture Lady Cop FIR Filed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->