நாடக காதல் கணவனின் கொடூரம்., திண்டுக்கல் அம்பேத்கர் நகரை சேர்ந்த நாகராஜ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு.!
dindigul panaveranpatti love husband arrest
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த கோபால் மகள் பிரியா. 22 வயதாகும் இவர், அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் நாகராஜ் (27 வயது) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
காதலித்து திருமணம் செய்து கொண்டதால், பெண்ணின் பெற்றோர்கள் அதிகபட்சமாக வரதட்சனை எதுவும் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.
திருமணம் முடிந்த சில நாட்களில், காதல் கணவன் தனது சுயரூபத்தை (நாடக காதலன்) காண்பித்துள்ளார்.
நாகராஜ் தனது மனைவி பிரியாவிடம், "உனது பெற்றோரிடம் சென்று வரதட்சனை வாங்கி வாங்கி வரவேண்டும். அப்படி இல்லை என்றால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்" என்று தெரிவித்துள்ளான்.
மேலும், தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பிரியாவிடம் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், 10 பவுன் நகையை வாங்கி வரச்சொல்லி, நாகராஜன் உறவினர்கள் அம்சவள்ளி, முருகன், சரவணகுமார், பஞ்சவர்ணம், ராஜ்குமார் ஆகியோர் தினமும் பிரியாவை கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பிரியா நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே இந்த விவரங்கள் அனைத்தும் தெரியவந்துள்ளது.
புகாரை பெற்று கொண்ட காவல் நிலைய போலீசார், வரதட்சினை வன்கொடுமை சட்டத்தின் கீழ் நாடக காதல் கணவன் நாகராஜ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
dindigul panaveranpatti love husband arrest