வசமாக சிக்கிய திண்டுக்கல் ரவுடி ஆசிக் முகமது! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!  - Seithipunal
Seithipunal


கடந்த 2023 ஆம் ஆண்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், திண்டுக்கல்லை சேர்ந்த ரவுடிக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிக் முகமது (31 வயது) என்பவரை போலீசார் போக்ஸோ வழக்கில் கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் போகோ சிறப்பு நீதிமன்றத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்தது. 

இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், குற்றம் சாட்டப்பட்ட ஆசிக் முகமதுவுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக உத்தரவிட்டார். 

ஏற்கனவே திண்டுக்கல்லில் பிரபல ரவுடியாக இருந்து வந்த ஆசிக் முகமது மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Rowdy Ashik case judgement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->