நட்புக்கு பெற்றோர் எதிர்ப்பு! எஸ்கேப் ஆன பள்ளி மாணவிகள் சென்னையில் மீட்பு! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன் பட்டி பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவர், ஒரே பள்ளியில் படித்து, நெருங்கிய தோழிகளாக இருந்து வந்த நிலையில், இவர்களின் நட்புக்கு இரு வீற்றரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதனால் மனவிரக்தியடைந்த தோழிகள் இருவரும், கடந்த வருடம் 2022 அக்டோபர் மாதம் 22ஆம் தேதி சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு மாயமாகினர்.

தோழிகள் இருவரில் ஒருவர் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், 'எங்களது விருப்பப்படி நாங்கள் செல்கிறோம். எங்களை தேட வேண்டாம்' என்று குறிப்பிட்டிருந்தார்.

மாணவிகள் மாயமானது குறித்து பெற்றோர்கள் தரப்பில் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவிகளை தேடி வந்த நிலையில், மாணவிகள் இருவரும் சென்னை பள்ளிக்கரையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடையில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

இதனை அடுத்து சென்னைக்கு சென்ற போலீசார் அவர்களை மீட்டு திண்டுக்கல் சமூகநலத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். பின்னர் மாணவிகள் இருவரும் பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul School girls Escape


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->