#தமிழகம் | அம்மா, அப்பா மன்னித்து விடுங்கள் - 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் எஸ்கேப்! தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை! - Seithipunal
Seithipunal



திண்டுக்கல் : அம்மா, அப்பா என்னை தேடாதீங்க. கடிதம் எழுதி வைத்துவிட்டு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர் வீட்டை விட்டு வெளியேற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவிகள் இருவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தங்களை யாரும் தேட வேண்டாம் என்று, மயமாகிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

வத்தலகுண்டு அடுத்துள்ள பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய இரண்டு மாணவிகள், நேற்று இரவு டியூஷனுக்கு செல்வதாக கூறிவிட்டு, தங்களுக்கு தீபாவளிக்கு எடுத்துக் கொடுத்த புதிய துணிகளை எடுத்துக்கொண்டு மாயமாகியுள்ளனர்.

தோழிகள் இருவரில் ஒருவர், "அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். இனி எங்களை தேட வேண்டாம்" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

மாணவிகள் மாயமானது குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து மாணவிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul School girls missing case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->