அங்கித் திவாரியை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி இல்லை.!! - நீதிமன்றம் அதிரடி.!!
dindugal verdict ED not allowed to investigate Ankit Tiwari
அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி.!
திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனிடம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்ற நீதிபதி மோகனா அமர்வின் முன்பு ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு வந்த போது ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமலாக்கத்துறை அதிகாரியை அமலாக்கத்துறையே விசாரணை நடத்தும் போது தாங்களும் உடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்
English Summary
dindugal verdict ED not allowed to investigate Ankit Tiwari