சுதேசி இயக்கத்தின் மைய புள்ளியாக தமிழ்நாடு இருந்தது - பிரதமர் மோடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தெரிவித்ததாவது,

"தமிழில் வணக்கத்துடன் ஆரம்பித்த பிரதமர் மோடி மிகவும் முக்கியமான காலத்தில் பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தெரிவித்ததாவது,இந்த காலம் காந்தியின் கனவுகளுக்கு சவால் நிறைந்த காலம். நாம் அனைவரும் இயற்கை மற்றும் எளிமையான வாழ்க்கையில் மட்டுமே காந்தியின் கொள்கைகளை பார்க்க முடியும்.

தேச ஒற்றுமைக்கு காரணம் மற்றவர்களின் கலாச்சாரத்திற்கு மதிப்பளிப்பதே ஆகும். இளைஞர்கள் அனைவரும் இயற்கை விவசாயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் அத்துடன் கிராம வளர்ச்சிக்காகவும் முளைக்க வேண்டும். தற்போது கிராமம் நகரம் என்ற வேறுபாடு இல்லை. நாட்டில் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கிராமங்களில் இயற்கை விவசாயம் செய்வதன் மூலம் நாட்டின் உர தேவையை குறைக்க முடியும். இதனால் கடந்த எட்டு ஆண்டுகளில் உரவிற்பனை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு கிராம உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் சுயசார்பு பாரதம் என்ற திட்டத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

தற்போது அனைத்து மக்களும் இயற்கை விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றதனால், கடந்த எட்டு ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தி 200 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடி அளவுக்கு காந்திகிராம பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. சுதேசி இயக்கத்தின் மைய புள்ளியாக தமிழ்நாடு இருந்தது. பெண்களின் வெற்றி தேசத்தின் பேச்சு" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindukal gandhikiramiya convacation function modi speach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->