பிரபல இயக்குனர் கௌதமன் தூத்துக்குடியில் கைது.!
Director gouthaman arrested in tuticorin
தமிழ் திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான கௌதமனை தூத்துக்குடி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் குறிஞ்சாக்குளம் காந்தாரி அம்மன் கோயில் வழிபாட்டு உரிமை போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த நான்கு பேருக்கு நடுகல் வழிபாடு செய்யவும், காந்தாரி அம்மன் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காகவும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குனருமான கௌதமன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார்.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் இயக்குனர் கௌதமன் பங்கேற்காமல் இருக்கும் வகையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து கௌதமனை போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
Director gouthaman arrested in tuticorin