ஒன்பது வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை; அண்ணன் , சிறுவர்கள் உற்பட்ட 04 பேர் கைது..!
Nine year old girl Harassed 4 people including brother and boys arrested
ராணிப்பேட்டை பகுதியில் 09 வயது பள்ளி சிறுமியை ,சிறுவர்கள் அடங்கிய நான்கு பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் தொல்லை செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி, வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது சிறுமியின் தாய்க்கு உறவு முறையில் அண்ணனான 17 வயது சிறுவன் மற்றும் 14 வயது சிறுவன், முனுசாமி, சக்கரவர்த்தி ஆகியோர் சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 04 பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செ்யதனர்.
அத்துடன், 04 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Nine year old girl Harassed 4 people including brother and boys arrested