அடி வெளுக்க போகுது.. தமிழ்நாட்டிற்கு கனமழை.. 26 ஆட்சியர்களுக்கு அவசர கடிதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொலை வெப்பம் தணிந்து கோடை மழை பெய்யத் தொடங்கியது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பம் தனித்து மக்கள் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் மே 31ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

 

இதற்கிடையே வரும் மே 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசர கடிதம் அனுப்பியுள்ளது. 

அந்த கடிதத்தில் தமிழ்நாட்டுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும், பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வருமே 19ஆம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Disaster Management sent urgent letter to 26 District Collectors of tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->