தென்காசிக்கு ஜூலை 31ல் உள்ளூர் விடுமுறை.!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உலகப் புகழ்பெற்ற சிவஸ்தலங்களுள் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு பெருந்திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி ஆடித்தபசு திருவிழா நடைபெற உள்ளதால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இந்த விடுமுறையானது அரசு பொதுத்தேர்வு இருப்பின் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

District Collector announced Local holiday for Tenkasi on July31


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->