பெரம்பலூரில் ட்ரோன்கள் பறக்க தடை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை மறுதினம் திருச்சி செல்கிறார். வரும் 28ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு விமான மூலம் திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து காட்டூர் செல்கிறார். அதன்பின் அங்கிருந்து புறப்படும் மு.க ஸ்டாலின் பெரம்பலூர் சென்று பகல் 12:30 மணியளவில் கோத்தாரி நிறுவனத்தின் புதிய ஆலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்நிகழ்ச்சி முடித்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர் மாளிகையில் அன்று இரவு ஓய்வு எடுக்கிறார். 

இதன் காரணமாக வரும் நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வருகை புரிவதால் பாதுகாப்பு கருதி இந்த இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பதாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

District Collector order to Ban on flying drones in Perambalur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->