விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிகவினர் வாக்களிக்கமாட்டார்கள்! அதிர்ச்சி கிளப்பிய பிரேமலதா! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிகவினர் வாக்களிக்கமாட்டார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளது. இந்தநிலையில், விக்கிரவாண்டி இடை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் முன்புறமாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்து 5ம் தேதி முதலமைச்சரின் சொந்த தொகுதியில் கூலிப்படையால்  படுகொலை செய்யப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 3  மாதத்தில் மட்டும் 6 படுகொலைகள் நடந்துள்ளன. நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சேலத்தில் அதிமுக பிரமுகர் சண்முகம், சென்னையில்  ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டியிலின சமூக மக்களின் பாதுகாலவர் என்று திமுகவினர் கூறுகிறார்கள். ஆனால் பாதிப்பு எல்லாம் பட்டியலின மக்களுக்கு தான் வருகிறது. கள்ளக்குறிச்சியில் 60க்கும் மேற்பட்டோர் கள்ளாச்சாராயம் குடித்து உயிரிழந்து  இருப்பவர்கள் எல்லாம் பட்டியலின மக்கள்தான் என்று தெரிவித்தார்.

பின்னர், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரமலதா விஜய்காந்த், இடை தேர்தலில் முறைகேடு செய்பவர்கள் மீது ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை? எனவே நாங்கள் இந்த விக்கிரவாண்டி இடத்தை தேர்தலில் போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேதிமுக தொண்டர்களும் புறக்கணிப்பார்கள் என பிரமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk members no vote in Vikravandi by election by Premalatha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->