கேப்டன் வாழ்க... அரசு ஒழிக.. - தடையை மீறி செல்லும் தேமுதிக பேரணி..!
dmdk rally going to captain vijayakant memorable place
பிரபல நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஒவ்வொரு வருடமும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர். அந்த வகையில், முதலாம் ஆண்டு குரு பூஜை இன்று கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் விஜயகாந்த் நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்த நிலையில் தடையை மீறி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் பேரணி தொடங்கியது.பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் அப்படியே பேரணியாக கிளம்பினர்.
அப்போது கேப்டன் வாழ்க... அரசு ஒழிக... என்ற முழக்கத்துடன் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி செல்கிறது. அனுமதி வழங்கினால், கோயம்பேடு பாலம் வழியாக பேரணி செல்லவிருந்த நிலையில் தற்போது அம்பேத்கர் சிலையில் இருந்து ஒருவழிப் பாதையாக செல்கிறது.
English Summary
dmdk rally going to captain vijayakant memorable place