விஜயகாந்தால் நடிகர் விஜய் படத்திற்கு ஆப்பு?! தேமுதிக தலைமை விடுத்த எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தை முன் அனுமதியின்றி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் படங்களில் பயன்படுத்தக்கூடாது என்று தேமுதிக தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

இதுகுறித்து கட்சித் தலைமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது.

எனவே, இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில், விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிக்க வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், முன் அனுமதியின்றி விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களில் பயன்படுத்தக்கூடாது என தேமுதிக தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எச்சரிக்கை விஜய் படத்திற்காகவா? அல்லது இனி வரும் படங்களில் யாரும் இப்படி முயற்சிக்க கூடாது என்பதற்காகவா என்று கேள்வி எழுந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK Vijayakanth AI GOAT movie issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->