'புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்' - 50 கிலோ சந்தன பேழையில் இடம்பெற்ற வசனங்கள்! - Seithipunal
Seithipunal


மறைந்த தேமுதிக நிறுவரும், நடிகருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வரை நடந்து வருகிறது.

நேற்று (டிச.28) காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை வரை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜகாந்த்தின் உடலுக்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

காலை 4 மணியளவில் விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்நிலையில், விஜயகாந்தின் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டு, மாலை 4.30 மணியளவில் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

50 கிலோ எடை கொண்ட சந்தனப் பேழை தயார் செய்யப்பட்டு, சந்தனப் பேழையின் ஒருபுறத்தில் 'புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்' என்கிற வாசகமும், நிறுவனத் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற வாசகமும், பிறப்பு மற்றும் இறப்பு தேதிகளும் இடம்பெற்றுள்ளது. சந்தனப் பேழையின் மற்றொரு பக்கத்தில் 'கேப்டன்' என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், சென்னை தீவுத்திடலில் இருந்து மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் இறுதி ஊர்வலம் நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK Vijayakanth Final journey


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->