நெல்லையை உலுக்கிய பாஜக நிர்வாகி கொலை! திமுக பிரமுகரை தட்டி தூக்கியது தனிப்படை! - Seithipunal
Seithipunal


நெல்லை பாஜக நிர்வாகி ஜெகன் பாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுகவைச் சேர்ந்த மூளிக்குளம் பிரபு என்பவரை தனி படை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை பாளையங்கோட்டையில் வசித்து வரும் பாஜக நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகன் பாண்டியன் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் நடத்து அவரது உறவினர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். குறிப்பாக இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திமுகவைச் சேர்ந்த மூளிக்குளம் பிரபு என்பவரை கைது செய்ய வேண்டும் என நான்கு நாட்களாக பாஜக நிர்வாகி ஜெகன் பாண்டியனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நெல்லை மாநகர் காவல் துறையினர் சிறப்பு தனிப்படை அமைத்து திமுக நிர்வாகி பிரபுவை வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்ட எல்லையில் வைத்து திமுக நிர்வாகியான மூளிக்குளம் பிரபுவை தனிப்படை போலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகியை பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK admin arrested in Nellai BJP executive murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->