நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்த அதிமுக, திமுக!
DMK an ADMK thank to TVK Vijay
இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நடிகர் விஜய் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கி வருகிறார். இதற்கான் நிகழ்ச்சி திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் 19 மாவட்ட மாணவர்களுக்கு இன்று நடிகர் விஜய் விருது வழங்குகிறார். மொத்தம் 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கூடிய சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன் என்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் இருந்துஅனுப்பிய நீட் விலக்கு மசோதாவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழக மாநில கல்வியில் பயின்றுவிட்டு தேசியக் கல்வியில் தேர்வு எழுத சொல்வது அநீதி.
நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. பன்முகத்தன்மை என்பது பலம் தான், பலவீனம் அல்ல. நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எனது பரிந்துரை. மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நீட் விலக்கு ஒன்றே தீர்வு. மேலும் நிரந்தர தேர்வுக்கு கல்வி பட்டியலை மாநில பட்டியலுக்கு மற்ற வேண்டும்" என்றும் நடிகர் விஜய் வலியுறுத்தினார்.
மேலும், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் நடிகர் விஜய் தனது கருத்தினை பதிவு செய்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய் நீட் தேர்வு எதிராக பேசியதற்கு அதிமுக தலைப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், நடிகர் விஜய் நீட் தேர்வு குறித்து பேசியது வரவேற்கத்தக்கது. மேலும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று நடிகர் விஜய் குரல் கொடுத்ததும் வரவேற்கத்தக்கது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல் நீட் தேர்வு விலக்கு பற்றி பேசிய நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நீட் விலக்கு பற்றி நடிகர் விஜய் பேசியதற்கு நன்றி. நீட் தேர்வுக்கு எதிராக நடத்தி வரும் திமுகவின் போராட்டத்திற்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார் என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
English Summary
DMK an ADMK thank to TVK Vijay