திமுகவை ஒழிப்போம் என்று பூச்சாண்டி வேலை காட்ட வேண்டாம் - தலைமை பேச்சாளர் சிவாஜி காட்டம்.!
dmk cheif speaker sivaji krishnamoorthy speech
கரூர் மாநகர திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் "திராவிட மாடல்" என்ற தலைப்பில் தளபதி பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் கரூர் மாநகர கழகச் செயலாளர் எஸ்.பி கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, “வருங்காலத்தில் ஆளப்போகும் முதல்வர் இருக்கிறார் என்று சொன்னால் உதயநிதி ஸ்டாலின். போராட்டம் என்றாலும், சிறைச்சாலை என்றாலும் குடும்பத்தோடு செல்வதால் நீங்கள் குடும்ப கட்சி என்று சொல்கிறீர்கள். தாங்கள் குடும்பமாக தான் இருக்கிறோம்.
![](https://img.seithipunal.com/media/sivaji-7bqkc.jpg)
திராவிட முன்னேற்ற கழகம் 1952 லேயே நாங்கள் ஆண்டவனுக்கு விரோதி இல்லை என்று சொல்லிவிட்டோம். கோயில் கூடாது என்பது எங்கள் கொள்கை அல்ல. கோயில் கொள்ளை அவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. பூசாரியை தாக்கினேன் பக்தர் என்பதற்காக அல்ல, பக்தி பகல் தேசமாகிவிடக்கூடாது என்பதற்காக.
1952 ஆம் ஆண்டு சொல்லி விட்டோம் இன்னும் அதே பல்லவையே பாடி வருகின்றனர். தேர்தலில் வாக்குறுதியை சொல்லி வாக்கு கேட்கிறோம். பத்தாண்டு காலம் பிஜேபி ஆட்சியில் இருந்தது. திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்தோம் என்று சொல்லுகின்றோம். தெம்பும் திராணியும் நரேந்திர மோடிக்கு இல்லை என்றால் ஓடிவிடு.
திமுகவை ஒழிப்போம் என்று பூச்சாண்டி வேலை காட்ட வேண்டாம். கலைஞருடைய பேரன் உதயநிதி ஸ்டாலின் சொல்லிவிட்டார். ஆண்மை இருக்கிறது. வாரிசு இருக்கிறது. இல்லையென்றால் மருத்துவமனைக்கு செல் என்று கூறினார். சீப்பை ஒழித்து விட்டால் திருமணம் நின்று விடுமா? கரூரில் செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்து விட்டால் கரூர் தொகுதியில் நீங்கள் பாஜக வெற்றி முடியுமா? செந்தில் பாலாஜி இல்லாவிட்டாலும் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். அதுதான் செந்தில் பாலாஜிக்கு பெருமை" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
dmk cheif speaker sivaji krishnamoorthy speech