நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக பதவியேற்றார் ராமகிருஷ்ணன்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த பி.எம்.சரவணனுக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால், அவர் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதையடுத்து திருநெல்வேலி மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் கடந்த 5-ந்தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் மேயர் பதவிக்கு 25-வது வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் என்ற கிட்டு போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பாளையங்கோட்டை 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் போட்டியிட்டார். இந்த தேர்தலில் மொத்தம் 54 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். அதில் ராமகிருஷ்ணன் 30 வாக்குகளும், பவுல்ராஜ் 23 வாக்குகளும் பெற்றனா். 

ஒரு வாக்கு செல்லாத வாக்காக உள்ளது. இதன் மூலம் மேயர் தேர்தலில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், ராஜாஜி மண்டபத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன் படி நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக ராமகிருஷ்ணன் பதவியேற்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk counsilar ramakrishnan appointed nellai meyar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->