குன்னூரில் சோகம் - திமுக நகர்மன்ற தலைவர் திடீர் மரணம்.!
dmk excuetive died in kunnnor
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், இருபத்து இரண்டு வார்டுகளில் திமுகவும், ஆறு வார்டுகளில் அதிமுகவும், காங்கிரஸ் மற்றும் சுயேட்சை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.
இதையடுத்து, நகராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று அதில், நகர்மன்ற தலைவராக ஷீலா கேத்தரின் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் நகர்மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் இன்று காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மதியம் உணவுக்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஷீலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நகர்மன்ற தலைவர் திடீரென உயிரிழந்த சம்பவம் குன்னூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
dmk excuetive died in kunnnor